காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் 7 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு

காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் 7 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பேருந்து நிலையம், செங்கழுநீரோடை வீதி, காந்தி சாலை உள்ளிட்ட 7 இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தையொட்டி, வெயிலில் நடமாடுவோர் தாகம் தீர்க்கும் வகையில் அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள், தேர்தல் நடத்தை விதியை பின்பற்றி, தண்ணீர் பந்தல் திறக்க, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அனுமதி வழங்கலாம்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்து இருந்தார். அதன்படி, காஞ்சிபுரத்தில் அரசியல் கட்சியினர் பலர் தண்ணீர் பந்தல் திறந்து வருகின்றனர்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பேருந்து நிலையம், செங்கழுநீரோடை வீதி, காந்தி சாலை உள்ளிட்ட 7 இடங்களில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. இதில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன் மற்றும் பாட்டம் வைக்கப்பட்டுள்ளது. வெயிலில் நடமாடுவோர், மாநகராட்சி சார்பில், வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பருகி வருகின்றனர்.

தண்ணீர் பந்தலை முறையாக பராமரிக்க மாநகராட்சி ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என, மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதேபோல, ஸ்ரீபெரும்புதுார் வடக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், சுங்குவார்சத்திரத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இங்கு தர்பூசணி, மோர் மற்றும் குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.

Tags

Next Story