காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி. செல்வம் தீவிரவாக்கு சேகரிப்பு....

காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி. செல்வம்  தீவிரவாக்கு சேகரிப்பு....

வேட்பாளர் ஜி. செல்வம்  

திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி. செல்வம் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் கள்ளபிரான்புரம், பழமத்தூர், பூதூர், ஈசூர், அறையப்பாக்கம், படாளம், வையாவூர் ஆகிய பல்வேறு கிராமங்களில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி. செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக மதுராந்தகம் தொகுதி பொறுப்பாளர் கான்ஸ்டன்ட் ரவீந்திரன், ஒன்றிய கழக செயலாளர் படாளம் சத்யசாய் ஆகியோர் திமுக அரசு பொது மக்களுக்காக செய்துள்ள மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம், வீடு தேடி மருத்துவம், உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரித்தனர். வாக்கு சேகரிப்பின் போது திமுக வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story