காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி 5 முனை போட்டி

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி 5 முனை போட்டி

5 முனை போட்டி

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் ஐந்து முனை போட்டி உருவாகியுள்ளது.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இறுதி செய்யப்பட்ட 13 வேட்பாளர்களில் இரண்டு சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் 11 வேட்பாளர்கள் தற்போது இறுதிச் செய்யப்பட்டுள்ளதால் ஐந்து முனை போட்டி உருவாகியுள்ளது. இந்தியா முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அவ்வகையில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டத்திலேயே தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த 20ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கி, 27 ஆம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டு, 28ம் தேதி வேட்பு மனு பரிசீலனை மாவட்ட தேர்தல் பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 18 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இறுதியாக 13 வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை 3 மணி வரை வேட்பு மனு வாபஸ் பெறலாம் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் , சுயேச்சை வேட்பாளர்களான மோகனசுந்தரம் , கார்த்திகேயன் என இருவர் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெறுவதாக அளித்த கடிதத்தினை ஏற்று வேட்புமனு வாபஸ் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் இறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் : கட்சி வேட்பாளர்கள் திமுக - செல்வம். அஇஅதிமுக - ராஜசேகர் பாமக - ஜோதிவெங்கடேசன் நாம் தமிழர் - சந்தோஷ் குமார் பகுஜன் சமாஜ் கட்சி - இளையராஜா சுயேச்சைகள் 1. ரமேஷ் 2. இளங்கோவன் 3. சூர்யா 4. செல்வம் 5. நரேஷ்பாரதி 6. வெங்கடேசன் என மொத்தம் 11 வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. வாபஸ் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் தங்களின் பிரதான கட்சி வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்கப்பட்டதால் மாற்று வேட்பாளராக மனு செய்த நிலையில் தாங்கள் விலகிக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story