காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
X

திமுக செயற்குழு கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் காஞ்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், காஞ்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் டாக்டர் சுபேர்கான், பச்சையப்பன், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், பாஸ்கர் சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர். வரும் நவம்பர் 5ஆம் தேதி திருவள்ளூரில் முதல்வர் தலைமையில் நடைபெறும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் பயிற்சி கூட்டத்தில் பங்கற்பது குறித்தும், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், நீட் விலக்கு நம் இலக்கு என்னும் கையெழுத்து இயக்கத்தை முன்னெடுப்பது குறித்தும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் மாநகர, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story