காஞ்சிபுரம் வரமஹாலட்சுமி சில்க்ஸ் ஸ்டோர் 60-வது கிளை ஒசூரில் துவக்கம்

காஞ்சிபுரம் வரமஹாலட்சுமி சில்க்ஸ் ஸ்டோர் 60-வது கிளை ஒசூரில் துவக்கம்

வரமஹாலட்சுமி சில்க்ஸ்

சாய் சில்க்ஸ் கலாமந்திர் காஞ்சிபுரம் வரமஹாலட்சுமி சில்க்ஸ் ஸ்டோர் 60-வது கிளை ஒசூரில் துவக்கம்

சாய் சில்க்ஸ் கலாமந்திர் காஞ்சிபுரம் வரமஹாலட்சுமி சில்க்ஸ் ஸ்டோர் 60-வது கிளை ஒசூரில் துவக்கம் இது தமிழகத்தின் 9-வது கிளை ஆகும். ஒசூர், பாரம்பரிய ஆயத்த ஆடை சில்லறை விற்பனையாளர் வரமஹாலட்சுமி சில்க்ஸ் லிமிடெட் (எஸ்.எஸ்.கே.எல்), நிறுவன அளவில் 60-வது கிளையாக, காஞ்சிபுரம் வரமஹாலட்சுமி சில்க்ஸ் கடையை, தமிழ்நாட்டில் ஒசூர் அருகே முகண்டபள்ளியில் துவக்கியுள்ளது.

புதிய கிளையை, எச்.எச் ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் சம்பத்குமார ராமானுஜ ஜீயர் சுவாமிகள் துவக்கி வைத்தார். இந்த நிறுவனத்தின் 60 வது கிளையாகவும், தமிழ்நாட்டில் ஒன்பதாவது கிளையாகவும் இது துவங்கப்படுகிறது. பாரம்பரியமிக்க, சேலைகள், திருணமங்களுக்கும், விழாக்களுக்கும் கைத்தறி சேலைகள் இதில் விற்பனையாகின்றன. பனராஸ், பட்டோலா, பைத்தனி, ஆர்கன்ஸா, குப்படம் மற்றும் காஞ்சிபுரம் சில்க்ஸ் உள்ளிட்ட உயர் ரக சேலைகள் இங்குள்ளன. ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் வலுவான நிலையில் கிளைகளை கொண்டுள்ளது.

பல்வேறு வகையான உயர்தர, மிக உயர்தர சேலைகள், ஹெகங்காஸ், ஆண்களுக்கான ஆடைகள், குழந்தைகளுக்கான உடைகளை விற்பனைக்கு வைத்துள்ளது. சாய் சில்க்ஸ் கலாமந்திர் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரசாத் சாலவாடி பேசுகையில், " தமிழ்நாட்டில் ஒன்பதாவது கிளையை துவக்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழ்நாட்டில் பாரம்பரிய, நவீன உடைகளை வழங்க தேவையான வளர்ச்சியை எட்ட, எங்களது விரிவாக்க நடவடிக்கை அவசியமாகிறது. தெலுங்கானாவில் உள்ளது போன்று, தமிழ்நாட்டிலும் ஊடுருவ வளர்ச்சி திட்டங்களை வகுத்து வருகிறோம்.

வளர்ச்சியை வலுப்படுத்த மேலும் இருப்பு கிடங்கு வசதி, கிளைகளை அதிகமாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்திய அளவில் 50 சதவீத சேலை விற்பனையைக் கொண்டுள்ள தென்னிந்தியாவில், எங்களது வளர்ச்சியை மேம்படுத்த கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார். எஸ்எஸ்கேஎல் பற்றி: எஸ்எஸ்கேஎல் நிறுவனம், கலாமந்திர், மந்திர், வரமகாலட்சுமி சில்க்ஸ் மற்றும் கேஎல்எம் பேஷன் மால் என்ற நான்கு வெவ்வேறு பெயர்களில் செயல்பட்டு வருகிறது.

தனது சொந்த இணையத்தளத்தில் இ காமர்ஸ் வழியிலும் விற்பனை மேற்காண்டு வருகிறது. அனைத்து பிரிவினருக்கும், ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்ற வகையில் அனைத்து உடைகளையும் விற்பனை செய்து வருகிறது. கடந்த 2023ம் நிதியாண்டில் 1351 கோடி ருபாய்க்கு விற்பனை செய்து, 97.60 கோடி ருபாய் லாபமாக ஈட்டியுள்ளது. பங்குச்சந்தை முதலீட்டில் முதல் முறையாக பங்குகளை வெளியிட்ட முதல் சேலை விற்பனை நிறுவனமாகவும், 2005 முதல் விரைவாக 59 கிளைகளை 6 லட்சம் சதுரடிகளில் துவக்கிய நிறுவனமாகவும் திகழ்கிறது.

Tags

Next Story