பிளாஸ்டிக் கழிவுகளால் சீரழியும் காஞ்சிபுரம் தாயார் குளம்

பிளாஸ்டிக் கழிவுகளால் சீரழியும் காஞ்சிபுரம் தாயார் குளம்

பிளாஸ்டிக் கழிவுகளால் சீரழியும் காஞ்சிபுரம் தாயார் குளம்

தாயார் குளத்தில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதோடு, பிளாஸ்டிக் பொருட்களை குளத்தில் வீச தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் முடங்கு வீதியில் இருந்து, கலெக்டர் அலுவலகத்திற்கு பின்பக்கமாக செல்லும் வழியில் தாயார் குளம் உள்ளது. இக்குளக்கரையில், நீத்தார் வழிபாடு, மாதாந்திர அமாவாசை, மகாளய அமாவாசை உள்ளிட்ட நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கமாக உள்ளது. குளக்கரையில் அமர்ந்து முன்னோருக்கு திதி கொடுத்தபின் மீதமுள்ள தயிர், பால், எள், தேன், தீப எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பாக்கெட்டுகள், வாட்டர் பாட்டில் மற்றும் இவற்றை கொண்டு வரும் கேரிபேக்குகளை குளத்தில் வீசிவிட்டு செல்கின்றனர்.

இதனால், குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் குவியலாக உள்ளது. இதனால்,குளத்து நீர் மாசடைவதோடு, அப்பகுதியில் நிலத்தடி நீரும் மாசடையும் சூழல் உள்ளது. எனவே, தாயார் குளத்தில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதோடு, பிளாஸ்டிக் பொருட்களை குளத்தில் வீச தடை விதிக்கவும், குப்பையை போடுவதற்கு என, அப்பகுதியில் குப்பை தொட்டி அமைக்கவும், காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story