கண்டதேவி கோவில் தேரோட்டம் - ஏடிஜிபி தலைமையில் ஆலோசனை கூட்டம்

கண்டதேவி கோவில் தேரோட்டம் - ஏடிஜிபி தலைமையில் ஆலோசனை கூட்டம்

சிவகங்கை

கண்டதேவி கோவிலில் தேரோட்டம் நடத்துவது தொடர்பாக ஏடிஜிபி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தில் வருகிற 21 ஆம் தேதி உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடைபெறவுள்ள கண்டதேவி தேரோட்டம் குறித்தான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் ஆஷா அஜித், ஏ.டி.ஜி.பி அருண் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

தேவகோட்டை அடுத்துள்ள கண்டதேவி கிராமத்தில் எழுந்தருளியுள்ள சொர்னலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆவனிமாதம் நடைபெறும் திருவிழாவும், அதனையொட்டி நடைபெறும் தேரோட்டமும் அப்பகுதியில் மிகவும் பிரபலம். இந்நிலையில் கடந்த 1998 ஆம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தேரோட்டமானது பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் பேச்சுவார்த்தையால் 2002 முதல் 2006 வரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட நிர்வாகமே முன் நின்று தேரோட்டத்தை நடத்திய நிலையில் கோவில் கும்பாபிஷேகத்தின் காரணமாக மீண்டும் நிறுத்தப்பட்டு 2012 ஆம் ஆண்டு கும்பாபிஷேகமும் நடைபெற்ற நிலையில் பழைய தேர் பழுதானதாக கூறி மீண்டும் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து இந்த பிரச்சனை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரவே நீதிமன்றம் உடனடியாக 2020 ஆம் ஆண்டு தேரோட்டம் நடத்த உத்தரவிட்ட நிலையில் கொரோனா காரணமாக மீண்டும் நிறுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவே 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதி தேரோட்டம் நடத்த மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிடவே மாவட்ட நிர்வாகம், தேவஸ்தானம், கிராம மக்கள் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி தேர் வெள்ளோட்டம் நடைபெற்ற நிலையில் ஜூன் 13 ஆம் தேதி கோவில் திருவிழாவிற்கென காப்புக்கட்டப்பட்டது.

வருகிற 21 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அந்த தேரோட்டம் சம்பந்தமாக சிவகங்கை ஆட்சியரகப் பகுதியில் உள்ள எஸ்.பி அலுவலகத்தில் ஆட்சியர் ஆஷா அஜித், ஏ.டி.ஜி.பி அருண், தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஐ.ஜி கண்ணன், டி ஐ.ஜி துரை, மதுரை மாவட்ட எஸ்.பி அரவிந்த், சிவகங்கை எஸ்.பி டோங்க்ரே உமேஷ் பிரவின், மற்றும் வருவாய்த்துறையினர், அறநிலையத்துறையினர், தேவஸ்தானம் தரப்பினர் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர். தேரோட்ட நாளன்று 2,800 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் 16 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Tags

Next Story