ஜுன் 21ஆம்‌ தேதி கண்டதேவி கோவில் தேரோட்டம்

ஜுன் 21ஆம்‌ தேதி கண்டதேவி கோவில் தேரோட்டம்

கண்டதேவி கோவில் தேரோட்டம்

கண்டதேவி கோவில் தேரோட்டம் ஜுன் 21 ஆம் தேதி நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே அமைந்துள்ள கண்டதேவி சொர்ண மூா்த்தீஸ்வரா் கோயில் ஆனிப் பெருந்திருவிழா கொடியேற்றப்பட்டு காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதில் வருகிற 21-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

இந்த விழாவையொட்டி தினமும் இரவில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலிக்கின்றனா். விழாவின் முக்கிய நிகழ்வாக 9- ஆம் நாளில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் கண்டதேவி கோயில் தேரோட்டம் சம்பந்தமாக பல்வேறு பிரச்னைகள் இருந்து வந்ததால் கடந்த பல ஆண்டுகளாக தேரோட்டத்துக்குப் பதிலாக சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலா வரும் நிகழ்வு நடைபெற்று வந்தது. இதுதவிர பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த தேரை பழுது நீக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து,

கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட தேரின் வெள்ளோட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டு திருவிழாவின் போது தேரோட்டம் நடைபெறும் என பக்தா்களும், கிராம மக்களும் எதிா்பாா்த்திருந்த நிலையில், இது தொடா்பாக தேவகோட்டை கோட்டாட்சியா் பால்துரை தலைமையில் கோயில் நிா்வாகத்தினா்,

கிராம மக்கள், பல்வேறு சமூகங்களின் பிரமுகா்களுடன் கடந்த 11 ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவின்படி தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அப்போது வழக்கமாக மாலையில் நடைபெறும் தேரோட்டத்தை இந்த ஆண்டு வரும் 21 -ஆம் தேதி காலையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

பல்வேறு பிரச்னைகளுக்குப் பிறகு தற்போது தேரோட்டம் நடத்தப்படுவதால் பக்தா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Tags

Next Story