ஸ்ரீபாலமுருகன் திருக்கோவில் கந்த சஷ்டி சிறப்பு பூஜை
முருக பெருமான்
ராசிபுரம் புதுப்பாளையம் சாலையில் ஶ்ரீ எல்லை மாரியம்மன் மற்றும் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் கந்த சஷ்டி சிறப்பு பூஜை அலங்காரம் நடைபெற்றது. கந்த சஷ்டி சூர சம்ஹார திருகல்யாண உற்சவ விழா 5 ஆம் நாள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் சாலையில் ஶ்ரீ எல்லை மாரியம்மன் மற்றும் ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் அமைத்துள்ளது.
கடந்த ஐப்பசி 27 ஆம் நாள் கொடி ஏற்றத்துடன் விழா துவங்கி இன்று கார்த்திகை 1 ஆம் வெள்ளி கிழமை சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.. முன்னதாக ஸ்ரீ பாலமுருகனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் தேன் பஞ்சாமிர்தம் இளநீர் பன்னீர், போன்ற 11 வகையான திரவியங்களுடன் ஶ்ரீ பாலமுருகனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ பாலமுருகனுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரணை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஸ்ரீ எல்லை மாரியம்மன் ஸ்ரீ பாலமுருகன் சாமியை வணங்கி அருள் பெற்றனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.