கருப்பர், காளியம்மன் கோயிலில் கிடா வெட்டு பூஜை

கருப்பர், காளியம்மன் கோயிலில் கிடா வெட்டு பூஜை

 கருப்பர்

கந்தர்வகோட்டை அருகே மட்டங்கால் கருப்பர், காளியம்மன் கோயில் கிடா வெட்டு பூஜையில் சுமார் 700 ஆட்டுகிடாக்களை வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

கந்தர்வகோட்டை அருகேயுள்ள மட்டங்கால் கிராமத்தில் கருப்பர், காளியம்மன் கோயில் கிடா வெட்டு பூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது. நிகழாண்டு கிடாவெட்டு பூஜையை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை முதல் சுவாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது வேண்டுதல் நேர்த்திக் கடனாக ஆட்டுக்கிடாக்களை சுவாமி முன்பு பூஜை செய்து பலியிட்டனர்.

சுவாமி ஊர்வலம், கிடா வெட்டு பூஜை அதிவிமரிசையாக நடைபெற்றது. சுவாமிக்கு நடைபெற்றது. சுவாமிக்கு முன்பாக சுமார் 700 ஆட்டுகிடாக்கள் வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோயில் எதிர்புறம் இரவு இன்னிசை கச்சேரி நடைபெற்றது. கந்தர்வகோட்டை, அக்கச்சிபட்டி, காட்டுநாவல், வீரடிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பொதுமக்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

Tags

Next Story