பழைய கோட்டை மாட்டுத் தாவணியில் ரூ.61ஆயிரத்திற்கு காங்கேயம் இன மயிலை பசுமாடு விற்பனை
பசுமாடு விற்பனை
திருப்பூர் மாவட்டம் பழைய கோட்டைமாட்டுத்தாவணியில் ரூ.61 ஆயிரம் மதிப்பில் காங்கேயம் இன மயிலை பசுமாடு விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த நத்தக்காடையூர் அருகே உள்ள பழைய கோட்டைமாட்டுத்தாவணியில் ரூ.61 ஆயிரம் மதிப்பில் காங்கேயம் இன மயிலை பசுமாடு விற்பனை செய்யப்பட்டது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த சந்தையில் காங்கேயம் இன மாடுகள், காளைகள், கன்றுகள் மட்டுமே விற்பனை நடைபெறுவது வழக்கம். காங்கேயம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழைய கோட்டைமாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்துக்கும் உலகப் புகழ் பெற்ற காங்கேயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தையில் காங்கேயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகள் மட்டுமே விற்பதும், வாங்குவதும் நடைபெறும். மேலும் இந்த காங்கேயம் இன கால்நடை விற்பனைச் சந்தையில் நேற்று காங்கேயம் இன பசு மாடுகளை வாங்குவதற்கு விவசாயிகள், வியாபாரிகள் அதிக ஆர்வமுடன் நேரில் திரளாக கலந்து கொண்டனர். இதனால் இந்த சந்தையில் நேற்று விற்பனைக் காக கொண்டு வரப்பட்ட மொத்தம் உள்ள 46 காங்கேயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகளில் மொத்தம் 27 நாட்டு பசுமாடுகள், காளைகள், கன்று கள் நேரடியாக விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட் டது. இதன்படி சந்தையில் அதிகபட்சமாக 9 மாத சினை யுடன் காங்கேயம் இன மயிலை பசுமாடு ரூ.61 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் சந்தை யில் காங்கேயம் இன இளங்கன்றுகள் ஆரம்ப விலை யாக ரூ.42 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட் டது. இதன்படி நேற்று மட்டும் ஒரே நாளில் இந்த சந்தையில் மொத்தம் ரூ.8 லட்சத்திற்கு காங்கயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.
Next Story