கோவை செழியன் நினைவு தினம் அனுசரிப்பு

கோவை செழியனின் நினைவு தினத்தையொட்டி காங்கேயம் அருகே குங்காருபாளையத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் மரியாதை செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஊதியூர் பகுதிக்குட்பட்ட குங்காருபாளையம் பகுதியில் அமைந்துள்ள கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் நிறுவனர் கோவை செழியன் நினைவிடத்தில் அவரது நினைவு தினமான மார்ச் 14ஆம் தேதி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக திருப்பூர் மாவட்டச் செயலாளர் கங்கா சக்திவேல் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் கோவை செழியன் மகன்கள் செம்பியன் சிவக்குமார், கபிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் நிறுவனருமான கோவை செழியனின் 24வது நினைவு தினத்தை முன்னிட்டு அவர் பிறந்த ஊரான குங்காரு பாளையத்தில் அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி அனைவரும் மரியாதை செலுத்தினர்.

மேலும் இந்நிகழ்வில் நாமக்கல் எம்.பி. சின்ராஜ் கலந்துகொண்டு மலர்த்தூவி மரியாதையை செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலிலே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பாக நாமக்கல் தொகுதியிலே ஒதுக்கப்பட்டு இருக்கிறது அந்த நாமக்கல் தொகுதியிலே இருந்து மிகப் பிரமாண்டமான வெற்றி பெற்று கோவை செழியன் அவர்களின் பாதத்தில் வெற்றியை சமர்ப்பிப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டதாகவும் அதனால் கொங்கு சொந்தங்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாநில இளைஞர் அணி செயலாளர் சூர்யா மூர்த்தி, தலைமை நிலைய செயலாளர் சுரேஷ் பொண்ணுவேல் , துணை பொதுச் செயலாளர் நித்தியானந்தம், மாநில விவசாய அணி துணை செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். திருப்பூர் புறநகர் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் நிர்மல்குமார் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குண்டடம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார் செய்திருந்தார்.

Tags

Next Story