காங்கேயம் : புதருக்குள் கிடந்த அரிவாளால் பரபரப்பு
திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதி திரு.வி.க. நகரில் இரவு அப்பகுதி சிறுவர்கள் சாலையில் பந்தை வைத்து விளையாடியுள்ளர். அப்போது பந்து சாலையை கடந்து ஒரு முட்புதருக்குள் சென்று விழுந்துள்ளது. அப்போது அந்த சிறுவர்கள் முட்புதருக்குள் சென்று பந்தை தேடியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சிறிய சாக்கு பை முடிச்சு போட்டவாறு கட்டப்பட்டு கிடந்துள்ளது.
பின்னர் அந்த சிறுவர்கள் தாங்கள் பார்த்ததை அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கூறியுள்ளனர். இதனை அடுத்து அந்த பையை அவிழ்த்து கீழே கொட்டி பார்த்தபோது அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் மிகப்பெரிய 2 வெட்டு கத்தியும் ஒரு கூறான கத்தியும் இருந்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக காங்கயம் போலிசாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை யார் இங்கு போட்டது? இந்த கத்திகள் எதற்காக பயன்படுத்தப்பட்டது? போன்ற கேள்விகள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.