விருதுநகரில் கனிமொழி பிரச்சாரம்
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் வேட்பாளர் களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மாணிக்கம் தாகூர் எம்பியை ஆதரித்து விருதுநகரில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்.பி கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.
மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் மத்தியில் பேசிய கனிமொழி எம்.பி நடைபெற உள்ள தேர்தல் எல்லா தேர்தலையும் போல் இந்த தேர்தல் இல்லை எனவும் இந்த தேர்தல் இரண்டாவது சுதந்திர போராட்டம் என்றார். மேலும் பிரதமர் மோடியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்தால் இந்தியாவில் நடக்கின்ற கடைசி தேர்தல் இந்த தேர்தல் தான். பின்னர் சர்வாதிகாரம் தலைவிரித்து ஆடும் என்றார்.
மேலும் பாராளுமன்றத்தில் மக்களுக்காக மாணிக்க தாகூர் எம்பி கேள்வி எழுப்பிய போது பலமுறை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்றார் . மேலும் கேள்வி கேட்கக் கூடிய நாடாளுமன்ற உறுப்பினரை தூக்கி வெளியே போடக்கூடிய அரசு தான் மோடி அரசு என குற்றம் சாட்டினார். மேலும் தேர்தல் நேரத்தில் காங்கிரஸின் எல்லா வங்கி கணக்குகளையும் முடக்கியுள்ளது இந்த பாஜக அரசு என்றார். மேலும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடர்ந்து சட்டங்கள் பாஜக அரசால் இயற்றப்பட்டு வருகிறது என்றார். மேலும் பேசிய கனிமொழி பிஜேபி சேர்ந்த அண்ணாமலை என்ன என் மன் என் மக்கள் என யாத்திரை செல்வார் ஆனால் கர்நாடகத்தில் இருக்கும் போது நான் தமிழன் கிடையாது கர்நாடகக்காரன் என்பார் அப்படி இருக்கும் சூழ்நிலையில் எதற்கு தமிழ்நாட்டில் வந்து தேர்தலில் நிற்கிறார் கேள்வி எழுப்பினார்.
நாங்கள் போராடி பெற்ற தமிழ்நாடு என்ற வார்த்தையை தமிழகம் மற்றும் தமிழ்நாடு என்று கூறுவதற்கு ஆளுநருக்கு என்ன அருகதை இருக்கிறது என்று விமர்சனம் செய்தார். மேலும் பேசிய கனிமொழி எம்பி நம்மளோட தமிழ்நாட்டின் உரிமைகளையும் நிதிகளையும் பறித்துக் கொண்ட பாஜக அரசால் தமிழ்நாட்டிற்கு எந்த திட்டமும் வராது மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டாலும் எந்த நிவாரணமும் வராது என குற்றம் சாட்டினார் மேலும் பேசிய கனிமொழி இந்தி மொழியை தேசிய மொழி என கூறிக்கொண்டு நம் மீது திணித்த பிரதமருக்கு தேர்தல் வந்தவுடன் பிரதமருக்கு தமிழ் மீது பற்று வந்துள்ளது விமர்சனம் செய்தார். மேலும் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் மோடி free-யாக இருப்பார் அப்போது தமிழக முதல்வர் அவருக்கு நல்ல தமிழ் ஆசிரியர் அனுப்பி வைத்து தமிழ் கற்றுக் கொடுப்பார் என்றார்.தமிழ் கற்றுக் கொண்ட பிறகாவது தமிழர்களின் உணர்வுகளை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும் என்றார்