காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்பி பிரச்சாரம்.
கனிமொழி எம்பி பிரச்சாரம்
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகையை ஆதரித்து கனிமொழி எம்பி நேற்று குழித்துறை சந்திப்பில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் .
அப்போது அவர் பேசும்போது.தமிழ்நாட்டில் கனமழை பெய்தபோது வராத மோடி இப்போது தேர்தலுக்காக வருகிறார். தமிழ்நாட்டிற்கு ஒரு பைசா கூட நிவாரணம் கொடுக்கவில்லை. பெரும் பான்மை மக்களுக்காக கூட எதுவும் செய்யவில்லை. 100 நாள் வேலைதிட்டத்துக்கான நிதியை ஒவ்வொருவருடமும் குறைத்துக் கொண்டேஇருக்கிறார்கள். இதுபற்றி நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் கேட்டேன். தேவை ஏற்படும் போது அதிகரித்துக் கொடுப்போம் என்றார். ஆனால் அதிகரிக்கவே இல்லை. இந்த தேர்தலில் நிச்சயமாக இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்து வருகிறது மக்களை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை.இந்து மதத்தை காப்பாற்றுவதாக மோடி கூறுகிறார். எத்தனையோ ஆண்டுகளாக உள்ள மதத்தை ஒரு கட்சி தான் காப்பாற்ற வேண்டுமா என அவர் கேள்வி எழுப்பினார்.