புதிய திட்டங்களை கனிமொழி எம்பி துவக்கம் !

புதிய திட்டங்களை கனிமொழி எம்பி துவக்கம் !

புதிய திட்டங்களை கனிமொழி எம்பி துவக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு அரசு கட்டிடங்கள், திட்டங்களை கனிமொழி எம்பி துவக்கி வைக்கிறார். 
தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 24, 25 ஆகிய தேதிகளில் பல்வேறு அரசு கட்டிடங்கள், திட்டங்களை கனிமொழி எம்பி துவக்கி வைக்கிறார். இது தொடர்பாக திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை : தி.மு.கழக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி பிப்ரவரி 24, 25 தேதிகளில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 3 - சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கொள்வதற்காக வருகை தருகிறார். அதன்படி பிப்ரவரி 24, சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சிவஞானபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அடிக்கல் நாட்டு விழா, காலை 8.30 மணி மார்த்தாண்டம்பட்டி தாய்சேய் துணை சுகாதார நிலையம் அடிக்கல் நாட்டுவிழா. காலை 9.00 மணிக்கு விளாத்திகுளம் சார்பதிவாளர் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா, காலை 9.30 மணிக்கு மந்திகுளம் இலந்தைகுளம் நியாயவிலைக் கடை திறப்பு விழா, இலந்தைகுளம் சமுதாய நலக்கூடம் அடிக்கல் நாட்டு விழா. காலை 10.00 மணிக்கு விருசம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கட்டடிடம், பயணியர் நிழற்குடை, துணை சுகாதார நிலையம் திறப்பு, காலை 10.30 மணிக்கு நெடுங்குளம் பல்லாகுளம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் கட்டடிடம் திறப்பு விழா. காலை 11.00 மணி தூத்துக்குடி அபிராமி திருமண மண்டபத்தில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தி.மு.க மகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பிப்ரவரி 25 ஞாயிற்றுக் கிழமை மாலை 3.00 மணிக்கு கோவில்பட்டி ஆர்த்தி மஹால் தி.மு.க மகளிரணி, மகளிர் தொண்டரணி சார்பில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சிகளில் அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள், மகளிரணி, மகளிர் தொண்டரணியின் நிர்வாகிகள், உள்ளாட்சிமன்ற மகளிர் பிரதிநிதிகள், மகளிரணி பெண்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திரளாக கலந்து கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story