பெற்றோரை இழந்த பெண்களுக்கு வீடு வழங்கிய கனிமொழி எம்பி

பெற்றோரை இழந்த பெண்களுக்கு வீடு வழங்கிய கனிமொழி எம்பி

மாணவிகளுடன் எம்.பி கனிமொழி 

திருச்செந்தூரில் கொரோனாவால் தாய்-தந்தையை இழந்த 4 பெண்களுக்கு கனிமொழி எம்பியின் முயற்சியால் நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் ஒரே குடும்பத்தில் தாய் மற்றும் தந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த நிலையில் பெற்றோரை இழந்த நான்கு பெண் குழந்தைகளும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியிடம், தங்களின் படிப்பைத் தொடரவும், சொந்தமாக ஒரு வீடும் தேவை என கோரிக்கை விடுத்தனர். பெண்களின் துயரை உணர்ந்த கனிமொழி கருணாநிதி, இந்த கோரிக்கை மனுவை முன்னாள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் கவனத்திற்குக் கொண்டு சென்று அந்த குடும்பத்திற்கு உறுப்பினர்கள் படிப்பைத் தொடர உதவி செய்தார்.

இந்த நிலையில் திருச்செந்தூர் நகராட்சி உட்பட்ட தோப்பூர் புது காலனியில், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய்,தந்தையர் இல்லாத குழந்தைகளுக்கு அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்பை திமுக துணைப் பொதுச் செயலாளரும்,தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.

மேலும், குடும்பத்தை சேர்ந்த நான்கு பெண் பிள்ளைகளுக்குக் கனிமொழி எம்.பி பரிசு பொருட்களை வழங்கினர். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, நகராட்சி துணைத் தலைவர் எ.பி.ரமேஷ், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் சுகுமார், திருச்செந்தூர் நகராட்சி ஆணையாளர் கண்மணி, திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story