தூத்துக்குடியில் வளர்ச்சிப்பணிகளை துவக்கி வைத்த கனிமொழி எம்.பி.,

தூத்துக்குடியில் வளர்ச்சிப்பணிகளை துவக்கி வைத்த கனிமொழி எம்.பி.,

தூத்துக்குடியில் வளர்ச்சிப்பணிகளை துவக்கி வைத்த கனிமொழி எம்.பி.,

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டப்பணிகளை கனிமொழி எம்.பி., துவக்கி வைத்து பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60வது வார்டு பகுதியில் உள்ள கோயில் பிள்ளை நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் மழை நேரங்களில் அதிக அளவு மழை நீர் தேங்குவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் எஸ்இபிசி நிறுவனம் சார்பில் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து மழை நீர் நீரை வெளியேற்றும் வகையில் அங்குள்ள 7 தெருக்களிலும் பைப் லைன் அமைக்கப்பட்டு இதை மின போட்டார்கள் மூலம் வெளியேற்றும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதை பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற திமுக குழு துணை தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து லைன் ஸ்டோன் பகுதியில் உள்ள சகாய மாதா தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் இந்த நிறுவன சமூக பொறுப்பு நிதியிலிருந்து கட்டப்பட்டுள்ளது. இதை பார்வையிட்ட கனிமொழி எம்பி அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் அங்கு மரக்கன்றுகளை நட்டனர். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story