கனிமொழி எம்பி பிரச்சாரம் இன்று துவக்கம் - அமைச்சர் தகவல்

கனிமொழி எம்பி பிரச்சாரம் இன்று துவக்கம் -  அமைச்சர்  தகவல்
X

கனிமொழி எம்.பி பிரச்சாரம் 

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர்  கனிமொழி கருணாநிதி இன்று (மார்ச் 24) கலைஞர் அரங்கம் முன்பு உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்குகிறார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மக்களவை தொகுதியில் I.N.D.I.A கூட்டணி வேட்பாளராக கனிமொழி கருணாநிதி போட்டியிடுவதை முன்னிட்டு இன்று 24.03.2024 ஞாயிற்றுகிழமை அன்று மாலை 5 மணியளவில் தூத்துக்குடி எட்டையாபுரம் சாலை, கலைஞர் அரங்கம் முன்பு உள்ள கலைஞர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து தனது பிரச்சாரத்தை துவக்கவிருக்கிறார்.

அந்நிகழ்வில் I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளான காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம், இந்திய தேசிய காங்கிரஸ் மாநகர மாவட்ட தலைவர் முரளிதரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் அர்ச்சுனன், மாநகர செயலாளர் முத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் தனலெட்சுமி ஞானசேகரன், ம.தி.மு.க மாநகர செயலாளர் முருகபூபதி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட செயலாளர் மீராசா, விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் கணேசன், மக்கள் நீதி மய்யம் மத்திய மாவட்ட செயலாளர் ஜவஹர், மனித நேய மக்கள் கட்சி தொகுதி பொறுப்பாளர் அகமது இக்பால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் கிதர் பிஸ்மி, சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் அற்புதராஜ், ஆதித் தமிழர் பேரவை மாவட்ட மகளிர் அணி செயலாளர் சீதாலட்சுமி, ஆதித் தமிழர் கட்சி மாநகர செயலாளர் அன்பரசு, தமிழ் புலிகள் கட்சி தூத்துக்குடி பொறுப்பாளர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

மேலும் மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் சுசீ. ரவிந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் ஆறுமுகம்,ராஜ்மோகன் செல்வின், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மற்றும் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

Tags

Next Story