கனிமொழியின் வெற்றி சாித்திர சாதனையாக வேண்டும் : அனிதா ராதாகிருஷ்ணன்

கனிமொழியின் வெற்றி சாித்திர சாதனையாக வேண்டும் :  அனிதா ராதாகிருஷ்ணன்

கனிமொழி எம்பி

எதிர்க்கட்சி வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்வதின் மூலம் கனிமொழியின் வெற்றி சாித்திர சாதனையாக வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனைக் கூட்டம், தெற்கு மாவட்ட திமுகவிற்குட்பட்ட ஓட்டப்பிடாரம் தொகுதி கிழக்கு ஓன்றிய திமுக தலைமை தேர்தல் காாியாலயத்தில் நடைபெற்றது. ஓன்றிய செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் தலைமை வகித்தார்.

இதில், தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை வழங்கி பேசுகையில் "இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி 5 ஆண்டுகாலம் தொகுதி மக்களுக்கு செய்த பணிகள் ஏராளம். மழை வௌ்ள காலத்தின்போது மக்களோடு மக்களாக இருந்து அவர்கள் நலனை பாதுகாப்பது அக்கறை கொண்டு செயல்பட்டார்.

தமிழக முதலமைச்சர் ஆட்சியில் செய்த சாதனைகளையும் அனைத்து பகுதி மக்களுக்கும் கொண்டு சென்று எதிர்த்து நிற்கும் வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்து கனிமொழியின் வெற்றி சாித்திர சாதனையாக வேண்டும். அதற்கு அனைவரும் இணைந்து ஓற்றுமையாக பணியாற்ற வேண்டும். உங்களுக்கு தேவையானவைகள் ஏதுவாக இருப்பினும் மாவட்ட கழகம் சார்பில் செய்து கொடுக்கப்படும். நம்முடைய மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வரும் மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டுதுறை சிறப்பு செயலாக்க திட்டத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 12, 13ம் தேதி பிரச்சாரத்திற்கு வருகை தரவுள்ளார். அதில் திராளானோர் கலந்து கொண்டு உற்சாகமாக வரவேற்க வேண்டும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற வார்த்தகைக்கேற்ப திமுக வில் தொடர் வெற்றி சாதனை தொடர வேண்டும் என்று பேசினார்

. கூட்டத்தில், முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், மாநில வா்த்தக அணி இணைச்செயலாளர் உமாிசங்கா், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, துணை அமைப்பாளர்கள் வக்கீல் பால்துரை, ஸ்டாலின், மகளிர் தொண்டரணி அமைப்பாளா் ஆரோக்கிய மோி, தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட பிரதிநிதிகள் சப்பாணி முத்து, தர்மலிங்கம், சிவக்குமார் உள்பட இந்தியா கூட்டணி கட்சியை சோ்ந்த பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story