கனமழையால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய கண்மாய்
கண்மாயில் மீன் வளர்ப்பு
நிலக்கோட்டை அருகே முசுவனூத்து ஊராட்சியில் உள்ள முசுவனூத்து கண்மாய் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சரியான மழை இல்லாதால் நிரம்பவில்லை. கடவா குறிச்சி மலை பகுதியில் கடந்த வாரம் தொடர்ந்து கனமழை பெய்ததை தொடர்ந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகு கண்மாய் நிரம்பியது.இதனைத் தொடர்ந்து முசுவனூத்து கிராம விவசாயிகள் கண்மாயில் மீன் வளர்க்க முடிவு செய்தனர். அதன்படி நீர்வளத்துறை அதிகாரிகளிடமிருந்து மானிய விலையில் வாங்கி கிராம கண்மாயில் பூஜை செய்து மீன் குஞ்சுகளை நீரில் விட்டனர்.
Next Story