குடியிருப்புகளை சூழ்ந்த கண்மாய் நீர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் கண்மாயிலிருந்து வெளியேறிய நீர் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருவண்ணாமலை ஊராட்சியில் இந்திராநகர் பகுதியில் கண்மாய் நீர் வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் கடந்த 15 நாள்களுக்கு மேலாக சூழ்ந்துள்ளது. அரசு அதிகாரிகளிடமும் திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் மீனாகண்ணன் என்பவரிடமும் அப்பகுதி வசிக்கும் பொது மக்கள் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆபத்தான முறையில் இருக்கும் கிணறு நீரில் மூழ்கியதால் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க மட்டும் வந்ததாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் தேங்கியிருக்கும் நீரால் வீட்டிற்குள் செல்ல முடியாத அவல நிலையும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது எனவும் காய்ச்சல் உள்ளிட்ட இன்னல்களுக்கு ஆளாவதாகவும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் குடியிருப்பு பகுதிக்குள் சூழ்ந்துள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத இப்பகுதியில் வாறுகால் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story