கட்டுமான பொருட்கள் விலை உயர்வை காண்டித்து ஆட்சிரிடம் மனு

கட்டுமான பொருட்கள் விலை உயர்வை காண்டித்து ஆட்சிரிடம் மனு
X
கட்டுமான வல்லுநர் சங்கம் மனு
தாறுமாறாக எகிறிய கட்டுமான பொருட்களின் விலை உயர்வால் பாதிப்பு என புகார்.

கன்னியாகுமரி மாவட்ட அகில இந்திய கட்டுமான வல்லுநர் சங்கம் சார்பில் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி குமரி மாவட்ட ஆட்சிதலைவரிடம் மனு கொடுக்கப்பட்டது.

தாறுமாறாக ஏறியுள்ள கட்டுமான பொருட்கள் விலை உயர்வை அரசு தலையிட்டு கட்டுபடுத்த கோரிக்கை மனு சங்கத்தலைவர் என்ஜினியர் காசிநாதன் தலைமையில் குமரி மாவட்ட ஆட்சிதலைவரிடம் கொடுக்கபட்டது. நிகழ்ச்சியில் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் என்ஜினியர் சிறில்கிறிஸ்துராஜ், முன்னாள் தலைவர்கள் என்ஜினியர் ஜஸ்டின் பால், சரவண சுப்பையா, ஆல்பர்ட் நெல்சன், கோவிந்தன், ரஜீஸ்குமார், தாமஸ்பிரேம்குமார், சிவில் என்ஜினியர் சங்க முன்னாள் தலைவர் ஜெயகர், என்ஜினியர் அலெக்ஸ், பரமேஸ், ராபர்ட் கென்னடி, தங்கவேல், அப்துல்காதர், ஜாண்லீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story