மயிலாடியில் பெண்ணிடம் செயின் பறித்த 2 பேர் கைது.

மயிலாடியில் பெண்ணிடம் செயின் பறித்த 2 பேர் கைது.
X

செயின் பறிப்பில் ஈடுபட்ட ௨ பேர் கைது 

குமரியில் நடந்து சென்ற பெண்ணை வழிமறித்து செயின் பறிப்பில் ஈடபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குமரி மாவட்டம் மயிலாடி பகுதி லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் மனைவி சுவேதா (35). இவர் கடந்த 10-ம் தேதி காலை வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் அவரது மகனை மயிலாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கொண்டு விட சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் சுபேதாவை இடிப்பது போன்று வழிமுறித்து அவரது கழுத்தில் கிடந்த ஏழு பவுன் தங்க செயினை பறித்து சென்று விட்டனர். இது குறித்து அவர் அஞ்சு கிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளின் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசார் நேற்று ஆரல்வாய்மொழி பகுதியில் வைத்து செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட செண்பகராமன் புதூர் மேல தெருவை சேர்ந்த ரங்கசாமி மகன் வெங்கடேசன் (47) மற்றும் மாதவாலயம், அனந்த பத்மநாபபுரம் மேல தெருவை சேர்ந்த கணேசன் மகன் பிரகாஷ் (27) ஆகிய இருவரையும் கைது செய்து,தங்க நகைகளை மீட்டனர். போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story