வாக்கு பட்டியலில் பெயர் சேர்ப்பு - நேரில் ஆய்வு செய்த ஆட்சியர்

X
வருகின்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் 100 சதவீதம் வாக்களித்த மாவட்டமாக திகழ வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம், தளவாய்புரம், தட்டான்விளை, கோட்டார் செட்டித்தெரு, வடிவீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல் (படிவம் -6), பெயர் நீக்கல் (படிவம் - 7), முகவரி மாற்றம் (படிவம் - 8) குறித்து நேரில் பார்வையிடும் நிகழ்ச்சி நடந்தது. இதனை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அவர் கூறியதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 18 வயது நிரம்பிய தகுதியான அனைவரும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும். யாரும் விடுபட்டு விடக்கூடாது. பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் 100 சதவீதம் வாக்களித்த மாவட்டமாக திகழ வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என தெரிவித்தார். நடைபெற்ற ஆய்வில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் தக.சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் கண்ணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story
