ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் – கலெக்டர் வேண்டுகொள்

ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் – கலெக்டர் வேண்டுகொள்

விழிப்புணர்வு பேரணி

கன்னியாகுமரியில் 100 சதவீத வாக்களிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதியன்று நடைபெறுவதையொட்டி, தேர்தல் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக 18 வயது நிரம்பிய முதல் வாக்காளர்கள் உட்பட வாக்குரிமை பெற்ற அனைரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., அவர்கள் தெரிவிக்கையில்,

வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி அன்று நடைபெறவுள்ள கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்குரிமை பெற்ற அனைவரும் எந்தவொரு சாதி, மத, இன, மொழி பாகுபாடு இல்லமால் வாக்குச்சாவடிக்கு சென்று தங்கள் ஜனநாயக கடமையினை ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஓட்டுக்கு பணம் பெற மாட்டன், எனது வாக்கு விற்பனை அல்ல” என்பதை மனதில் கொண்டு, 100 சதவீதம் வாக்களித்த மாவட்டமாக நமது கன்னியாகுமரி மாவட்டம் முன்மாதிரி மாவட்டமாக திகழ வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். வாக்குப்பதிவு குறித்தும் மற்றும் தேர்தல் குறித்த உங்கள் சந்தேகங்களை 04652- 1950 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். வாக்குரிமை பெற்ற அனைவரும் வரும் ஏப்ரல் 19 ம் தேதி வாக்குச்சாவடிகளுக்கு வாருங்கள் வாக்களிப்போம் இவ்வாறு தெரிவித்தார்.

Tags

Next Story