சமூக வலைத்தளத்தில் அவதூறு - இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

சமூக வலைத்தளத்தில் அவதூறு - இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
வாட்சப்பில் அவதூறு பரப்புவதாக கூறி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் குறித்து திங்கள் நகர் பணிமனை கிளை மேலாளர் மகேஷ் வாட் ஸ்டாப்பில் தவறான கருத்து பதிவு செய்ததை கண்டித்து நகர் பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு குருந்தன் கோடு ஒன்றிய தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட லைவர் கிருஷ்ணகுமார் குருந்தன்கோடு ஒன்றிய செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். கோட்ட பொறுப்பாளர் மிசா சோமன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் குறித்து விளக்கி பேசினார்.

மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ், பா.ஜ.க மாநிலசெயலாளர் உமாரதிராஜன் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர்.காந்தி, திங்கள் நகர் கவுன்சிலர்கள் குமரன், ஜெயசேகரன், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தலைவர் கோபு, ஒன்றிய பொருளாளர் பிரேம், ரெத்தினபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார். ஆர்பாட்டத்திற்க்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story