கோடீஸ்வர வேட்பளர்கள் களம் காணும் குமரி தொகுதி

பாஜக, நாம் தமிழர், அதிமுக வேட்பாளர்கள்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மரிய ஜெனிபர் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.2,41,20,999 எனவும், அசையா சொத்தின் மதிப்பு ரூ. 2,13,65,509 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அசையும் சொத்தில் 1000 கிராம் தங்க நகைகள், 70 கிராம் பிளாட்டினம் ஆகியவைகளும் அடங்கும். மரிய ஜெனிபரின் கணவர் சாலோமன் தீபக் பெயரிலுள்ள அசையும் சொத்தின் மதிப்பு ரூ.1,14,23,914 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அ.தி.மு.க வேட்பாளர் பசிலியான் நசரேத்தின் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ.3,34,77,241 எனவும், அசையா சொத்தின் மதிப்பு ரூ. 4,82,10,790 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பசிலியான் நசரேத்தின் மனைவி மேரி பசிலியானின் அசையும் சொத்தின் மதிப்பு ரூ. 1,04,95,000 என குறிப்பிடப்பட்டுள்ளது. பசிலியான் நசரேத்திடம் உள்ள பென்ஸ் காரின் (mercedes Benz) மதிப்பு மட்டும் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பா.ஜ.க வேட்பாளரான பொன்.ராதாகிருஷ்ணனின் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.64,03,778 ஆகும். அசையா சொத்துக்கள் ரூ.6,99, 40,155 ஆகும். இவரது அசையா சொத்துக்கள் பூர்வீக குடும்ப சொத்துக்கள் என குறிப்பிட்ப்பட்டுள்ளன.
