திமுக நிர்வாகியை அடித்து உதைத்ததாக 8 பேர்  மீது வழக்கு

திமுக நிர்வாகியை அடித்து உதைத்ததாக 8 பேர்  மீது வழக்கு
கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்
கொலை செய்வதாக மிரட்டி அடித்து உதைத்த கும்பல்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே ஓரிப்பாறை பகுதியை சேர்ந்தவர் சாபு. இவர் மேல்புறம் வடக்கு ஒன்றிய திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளராக உள்ளார். நேற்றிரவு காரோடு பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றார்.

அப்போது மண்டபத்தில் இருந்த நான்கு பேர் திடீரென சாபு விடம் தகராறு செய்துள்ளனர். அவர்களுக்குள் முன் வருவதும் இருந்ததா கூறப்படுகிறது. இந்த நிலையில் மண்டபத்தில் இருந்த மேலும் நான்கு பேர் சேர்ந்து எட்டு பேராக சாபுவை அடித்து உதைத்து, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இதில் காயமடைந்த சாபு அருமனை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் எட்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story