கன்னியாகுமரி : திக்கணம் கோட்டில் பள்ளி வகுப்பறை கட்டிடம் திறப்பு..!

X
கன்னியாகுமரி மாவட்டம் புதூர் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைகளை எம்.பி. விஜய்வசந்த் திறந்துவைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் திக்கணங்கோடு ஊராட்சிக்குட்பட்ட புதூர் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் போதுமான வகுப்பறை இல்லாத நிலை காணப்பட்டது. இந்த நிலையில் பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் புதிதாக வகுப்பறைகள் கட்டி தரும்படி கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த்திடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். அதனடிப்படையில் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022 - 2023 ஆண்டு நிதியிலிருந்து இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்ட ரூ25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த வகுப்பறைகள் கட்டும் பணிகள் நிறைவு பெற்றது. வகுப்பறைகள் திறப்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. விஜய்வசந்த் எம்.பி திறந்து வைத்தார். பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக திக்கணங்கோடு சந்திப்பில் காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து சால்வை அணிவித்து செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்குள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Next Story
