சாலை  நடுவே உள்ள தடுப்பு சுவரில் டாரஸ் லாரி மோதி விபத்து 

சாலை  நடுவே உள்ள தடுப்பு சுவரில் டாரஸ் லாரி மோதி விபத்து 
சாலை தடுப்பில் டாரஸ் லாரி மோதி விபத்து
சாலையில் உள்ள தடுப்பு கற்களால் விபத்து ஏற்படும் அச்சம்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனை தீர்க்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறுகலான சாலைகளை விரிவாக்கம் செய்வது, தடுப்பு வேலிகள் அமைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளை இருவழிச் சாலைகளாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த தடுப்பு கற்கள் கடந்த சில நாட்களாக விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இதனால் பீச் ரோடு பகுதியில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு கற்கள் மீது இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. டெரிக் சந்திப்பு பகுதியில் அரசு பஸ் மோதி நடுரோட்டில் கவிழ்ந்தது. வடசேரி பகுதியில் சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது கார் ஒன்று மோதியது.

இந்தச் சூழலில் வெட்டூர்ணிமடம் பகுதியில் டாரஸ் லாரி சாலை நடுவில் உள்ள தடுப்பு கற்கள் மீது மோதியது. இந்த விபத்தால் பொதுமக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது. இதனை தவிர்க்க தடுப்பு கற்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும், தடுப்பு கற்களில் ஒளிரும் சிவப்பு விளக்குகளை பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story