கன்னியாகுமரி கடற்கரை இன்று 3- ம் நாளாக வெறிச்சோடியது

கன்னியாகுமரி கடற்கரை இன்று 3- ம் நாளாக வெறிச்சோடியது

கன்னியாகுமரி

பிரதமர் வருகை எதிரொலி. கன்னியாகுமரி கடற்கரை இன்று 3- ம் நாளாக வெறிச்சோடியது.
கன்னியாகுமரிக்கு கோடை விடுமுறையையொட்டி கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி வட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால் கன்னியாகுமரி கடற்கரை காலை, மாலை நேரங்களில் பரபரப்பாக இருக்கும். இந்த நிலையில், பிரதமர் மோடி 3 நாள் கன்னியாகுமரி வருகையைடுத்து கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கடற்கரை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை நேற்று குறைவாக காணப்பட்டது. கடற்கரை பகுதிகள் வெறிச்சோடியது.காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம் பகுதிகளில் வழக்கமாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். இன்றும் 3-ம் நாளாக சாலை, கடற்கரை பகுதிகள் காலையிலேயே வெறிச்சோடி காணப்பட்டது. கன்னியாகுமரியில் உள்ள கடைகள் வழக்கம் போல் திறந்து செயல்பட்டாலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இல்லாததால் வியாபாரம் இன்றி வெறிச்சோடி இருந்தது.

Tags

Next Story