கன்னியாகுமரி பாஜ வேட்பாளர் தேர்தல் வாக்குறுதி

கன்னியாகுமரி பாஜ வேட்பாளர் தேர்தல் வாக்குறுதி

தேர்தல் வாக்குறுதி அளித்த பாஜக வேட்பாளர் 

கன்னியாகுமரி பாஜ வேட்பாளர் தேர்தல் வாக்குறுதி அளித்தார்.

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதியஜனதா வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று நாகர்கோவில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் தனது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். எம் ஆர் காந்தி எம் எல் ஏ பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, என்னுடைய பாராளுமன்ற உறுப்பினர் சம்பளம் முழுவதையும் ஏற்கனவே மக்கள் நலனுக்காக செலவு செய்தேன். இனிவரும் காலங்களிலும் அதேபோல் மக்களின் நலனுக்காக செலவுசெய்வேன். குமரி மாவட்டத்தில் நவோதயா பள்ளி கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்வேன்.

தமிழகத்தில் போதை பொருள்களால் பள்ளி மாணவ மாணவிகளின் வாழ்க்கை தரம் பாதிக்கப்பட்டுள்ளது .போதைப் பொருட்களை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். குமரி மாவட்டத்தை சுற்றுலா ஸ்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் . சொத்தவிளை, திக்குறிச்சி,

முட்டம் போன்ற சுற்றுலா தலங்களை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு பாரதிய ஜனதா அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது . குமரி மாவட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்ட சாலைகள் மோசமான நிலையில் உள்ளது .அந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கன்னியாகுமரி தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல ஆண்டுகளாக அந்த பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. அந்த பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். குமரி மாவட்டத்தில் இ‌எஸ்.ஐ.மருத்துவமனை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது .அந்த ஆஸ்பத்திரியை கொண்டு வர வேண்டி நடவடிக்கை எடுப்பேன். நாகர்கோவில் நகரில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தென்னை ஆராய்ச்சி மையத்தை மேம்படுத்த நடவடிக்கையை மேற்கொள்வேன். மீனவ மக்களுக்கான அடிப்படை வசதிகள் அனைத்தும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் .குமரி மாவட்டத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைப்பதுடன் ஆம்புலன்ஸ் வசதியுடன் கப்பல் நிறுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்வேன். தேங்காய் பட்டணம் துறைமுகத்தை சிறந்த மீன்பிடித் துறைமுகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது எம் ஆர் காந்தி எம்எல்ஏ மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன் மாநிலச் செயலாளர் மீனாதேவ், தா மா க மாவட்ட தலைவர் டி ஆர் செல்வம் அமமுக மாவட்ட செயலாளர் ராகவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story