கன்னியாகுமரி தொகுதி மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கீடு

கன்னியாகுமரி தொகுதி மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கீடு
விஜய் வசந்த்
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் விஜய் வசந்த் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு இந்தியா கூட்டணியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் விஜய் வசந்த் எம் பி மீண்டும் போட்டியிட வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்திய கூட்டணியின் தொகுதி பங்கீடு முடிந்து போட்டியிடும் தொகுதிகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் தற்போது காங்கிரஸ் வசம் உள்ள கன்னியாகுமரி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலிலும் அதனை தொடர்ந்து நடைபெற்ற இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியே தொடர்ந்து இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.

வசந்தகுமார் எம்பி திடீர் மறைவை தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்ற இடை தேர்தலில் இந்த தொகுதியில் மொத்தம் 12 பேர் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் போட்டியிட்டு 5 லட்சத்து 76 ஆயிரத்து 37 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த நிலையில் தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் வேட்பாளர் மீண்டும் விஜய் வசந்த் நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. வேட்பாளர் குறித்து உடனடியாக அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story