சுற்றுலாப் பயணிகள் இன்றி  வெறிச்சோடிய கன்னியாகுமரி

  சுற்றுலாப் பயணிகள் இன்றி  வெறிச்சோடிய கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் தொடர் மழை எதிரொலியால் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.


கன்னியாகுமரியில் தொடர் மழை எதிரொலியால் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்லுகின்றனர். கன்னியாகுமரியில் பொதுவாக கோடைகாலமான ஏப்ரல், மே மாதங்கள் சீசன் காலங்களாகும். அப்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பதால் எப்போதும் கன்னியாகுமரி பரபரப்பாக காணப்படும் . அங்குள்ள கடைகளிலும் அதிக அளவில் விற்பனைகள் ஏற்ப்படும்.

இந்த நிலையில் தற்போது சுமார் ஒரு வார காலமாக கோடை மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரியில் இந்த தொடர் மழையால் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. ஞாயிற்றுக்கிழமை யான இன்று விடுமுறை தினங்களாக இருந்த போதிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்திருந்தது.'இதனால் முக்கடல் சங்கமம் உட்பட்ட கன்னியாரியின் அனைத்து பகுதியும் வழிச்சோடிய நிலையில் காணப்பட்டது.

Tags

Next Story