கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தல் வேட்பு மனு இன்று தாக்கல் 

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தல் வேட்பு மனு இன்று தாக்கல் 

போலீஸ் குவிப்பு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தல் வேட்பு மனு இன்று தாக்கல் நடைபெறுவதால் போலீஸ் குவிப்பு .
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி தேர்தலுக்கு குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் இன்று நடைபெறுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தேர்தல் நடத்தும் அலுவலராக வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்கிறார். வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர் மற்றும் அவருடன் நான்கு நபர்கள் என்று மொத்த ஐந்து பேர் மட்டுமே மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேட்பாளருடன் மூன்று வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் கலெக்டர் அலுவலகத்தில் நுழைவாயிலில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் வாகனங்கள் நிறுத்த வேண்டும் எனவும், ஊர்வலமாக செல்லும் போது பட்டாசு வெடிக்கும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து இன்று காலை முதலே நூற்றுக்கணக்கான போலீசார் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story