கன்னியாகுமரி புதிய படகு தளம் மார்ச் மாதத்திற்குள் முடிவதாக தகவல்

கன்னியாகுமரி புதிய படகு தளம் மார்ச் மாதத்திற்குள் முடிவதாக  தகவல்


கன்னியாகுமரியில் 7 கோடி ரூபாய் செலவில் புதிய படகு தளம் மார்ச் மாதத்திற்குள் முடிவதாக தகவல் கிடைத்துள்ளது.


கன்னியாகுமரியில் 7 கோடி ரூபாய் செலவில் புதிய படகு தளம் மார்ச் மாதத்திற்குள் முடிவதாக தகவல் கிடைத்துள்ளது.

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடலில் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைகளை பார்வையிடவும், வட்டக் கோட்டை சுற்றுலா படகு என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் 5 இயக்கப்படுகிறது. இந்த படகுகளை நிறுத்த தற்போதைய படகு தளத்தில் போதுமான இட வசதிகள் இல்லை. கடல் அலை கடல் சீற்றம் ஏற்படும் போது, படகுகள் ஒரே இடத்தில் நிறுத்தும் சமயத்தில் ஒன்றோடு ஒன்று மோதும் நிலை உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து 7 கோடியில் புதிதாக படகுத்துறை அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தற்போதைய படகு துறைக்கு எதிர்ப்புறம் உள்ள கடல் பகுதியில் புதிய படகு தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் 80 மீட்டர் உயரத்துக்கு சிமெண்ட் பிளாக்குகள் அமைக்கப்பட்டு இந்த பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இந்த மாதத்தில் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கடல் சீற்றம் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணத்தால் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது. எனவே வருகிற மார்ச் மாதத்திற்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story