கன்னியாகுமரி : முக்கடல் சங்கமத்தில் புறக்காவல் நிலையம் 

கன்னியாகுமரி : முக்கடல் சங்கமத்தில் புறக்காவல் நிலையம் 
கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் பகுதியில் போலீஸ் அவுட் போஸ்ட்
கன்னியாகுமரியில் கடல் சீற்றத்தால் பல உயிரிழப்புகள் நிகழ்ந்த நிலையில் சுற்றுலா பயணிகள் கடலுக்கு அருகே செல்வதை தடுப்பதற்காக முக்கடல் சங்கமத்தில் புறக்காவல் நிலையம் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அலைகளுடன் கடல் சீற்ற மாக காணப்படுகிறது. இதைத் தொடர்ந்து சுற்றுலா தலமான கன்னியாகுமரி கடல் பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்று 11 -வது நாளாக கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கன்னியாகுமரி கடற்கரை யில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆனால் கடலில் இறங்கி கால் நனைக்கவோ, குளிக்கவோ சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட வில்லை.

இருப்பினும் முக்கடல் சங்கமத்தில் போலீஸ் பாதுகாப்பு இல்லாத பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி ஆனந்த குளியல் போட்டனர் அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதியில் புறக்காவல் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த புறக்காவல் நிலையம் 24 மணி நேரமும் செயல்படுகிறது. இதன் மூலம் அந்த பகுதியில் உள்ளூர் போலீசார், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் சுற்றுலா பாதுகாவலர்கள் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் சுற்றுலா பயணிகளிடம் கடல் பகுதிக்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தி வருகிறார்கள். அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் சுற்றுலா போலீசார் கடல் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்த வண்ணமாக உள்ளனர்.

Tags

Next Story