ஆயரிடம் ஆசி பெற்ற கன்னியாகுமரி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர்
அதிமுக வேட்பாளர்
தக்கலையில் மறை மாவட்ட ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரனை சந்தித்து அதிமுக வேட்பாளர் பசலியான் நாசரேத் ஆசி பெற்றார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது இதையொட்டி தேர்தல் ஆணையம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக பாஜ சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. சார்பில் பசி லியான் நசரேத், காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய் வசந்த் எம்.பி., நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் மற்றும் சுயேச்சை வேட்பாளர் கள் என 33 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கி உள்ளனர். இதனிடைய கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பசிலியான் நசரேத் ஜீரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையின் தக்கலை மறை மாவட்ட ஆயர் ஜார் ராஜேந்திரனை சந்தித்து ஆசி பெற்றார்.
Next Story