கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் 4 முனை போட்டி

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் 4 முனை போட்டி

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் 4 முனை போட்டி 

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் 4 முனை போட்டி நிலவுவதால் பலத்த போட்டி நிலவுகிறது.

இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று 1952 தொடங்கி 2004 வரை நடைபெற்ற தேர்தல்கள். இரண்டாவது 2009 தொடங்கி 2021 வரை நடைபெற்ற தேர்தல்கள். அதாவது, 1952-2004 வரை நடைபெற்ற 15 லோக்சபா தேர்தல்கள் நாகர்கோவில் தொகுதி என்கிற பெயரில் நடைபெற்றிருக்கிறது. இதில் 8 தேர்தல்களில் காங்கிரஸ்தான் வென்றிருக்கிறது.

அதன் பின்னர் 2009-2021 வரை கன்னியாகுமரி தொகுதி என பெயர் மாறிய பின், 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 3.7 லட்சம் வாக்குகள் பெற்று பாஜகவின் பொன் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். 2019ம் ஆண்டு தேர்தலில் எச்.வசந்தகுமார் 6.2 வாக்குகள் பெற்று அபார வெற்றிபெற்றார். ஆனால் 2021ம் ஆண்டு அவர் மறைந்ததையடுத்தையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இடைத்தேர்தலில் வசந்தகுமாரின் மகன், விஜய் வசந்த் காங்கிரஸ் சார்பில் நின்று வெற்றி பெற்றார்.

இந்த தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பொன் ராதாகிருஷ்ணன் 2 முறை மத்திய இணை அமைச்சர் ஆகவும் பதவி வகித்துள்ளார். தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் இறங்குகின்றன. காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே பாராளுமன்ற உறுப்பினராக உள்ள விஜய்வசந்த் களம் இறக்கப்படுகிறார். வேட்பாளருக்கான முறையான அறிவிப்பு இன்னும் வராமல் இருந்தாலும் காங்கிரசார் தேர்தல் வேலைகளை தொடங்கி விட்டனர்.

கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் விஜய் வசந்த் எம்.பி. ஆகிய இருவரும் மீண்டும் நேரடியாக மோத உள்ளனர். தி.மு.க.வும் தேர்தல் களத்தில் குதிக்க தயாராகி விட்டது. அ.தி.மு.க. சார்பில் மாநில மீனவரணி இணை செயலாளராக உள்ள பசிலியான் நசரேத்திற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாம் தமிழர் கட்சி சார்பில் மரிய ஜெனிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு ஆதரவு திரட்டும் பணியை தொடங்கிவிட்டார். வெற்றிக்கனியை பறிப்பதற்கு காங்கிரஸ், பாரதி ஜனதா, அ.தி.மு.க. கட்சிகள் முட்டி மோதுகின்றன. நாம் தமிழர் கட்சியும் கணிசமான வாக்குகளை பெற பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர். ஆகவே கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியை பொறுத்தமட்டில் நான்கு முனைபோட்டி நிலவுகிறது.

Tags

Next Story