கன்னியாகுமரி : விடுபட்டவர்களுக்கு இன்று தபால் வாக்கு பதிவு 

கன்னியாகுமரி : விடுபட்டவர்களுக்கு இன்று தபால் வாக்கு பதிவு 

தபால் வாக்கு செலுத்தும் மூதாட்டி 

குமரியில் தபால் வாக்கு செலுத்த முடியாமல் விடுபட்டவர்களுக்கு இன்று வாக்கு பதிவு நடக்கிறது.

கன்னியாகுமரி மக்களை தொகுதியில் மொத்தம் 14 ஆயிரத்து 207 பேர் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இதனை போன்று மாற்றுத்திறனாளிகள் 12,295 பேர் உள்ளனர். இதில் இந்த தேர்தலில் தபால் வாக்கு அளிக்க 2546 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் 3982 பேரும் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ள நிலையில், இந்த வாக்காளர்கள் வீடுகளுக்கு சென்று தபால் வாக்கு பெற 119 சிறப்பு குழுக்கள் மாவட்ட தேர்தல் நடத்து அலுவலரால் அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் வீடு தேடி சென்று வாக்காளரிடம் வாக்குப்பதிவு நடத்தினர். காவல் துறை அலுவலர்கள் மற்றும் வீடியோகிராபர் ஆகியோர் உடன் செல்கின்ற நிலையில் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவிலும் பதிவு செய்யப்படுகிறது. காலை 8:00 மணி முதல் மாலை 5 மணி வரை தபால் வாக்குப்பதிவுகள் நடைபெற்றது. பின்னர் பதிவு செய்யப்பட்ட தகவல் வாக்கு பதிவுகளை அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதில் விடுபட்டவர்களுக்கு இன்று பத்தாம் தேதி தபால் வாக்குப்பதிவு நடக்கிறது.

Tags

Read MoreRead Less
Next Story