விவசாய நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்

விவசாய நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றம்
விவசாய நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் அகற்றம்
கன்னியாகுமரியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றியதால் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்துள்ள அருமநல்லூர் பகுதியில் குண்டுகுளம் அருகே சாலையோரமாக ஆறு வீடுகள் இருந்தன. அவை விவசாய நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் இடையூறு உள்ளதாக கூறி அந்த ஆறு வீடுகளை அகற்ற வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

விவசாய நிலத்தை ஆக்கிரமித்து ஆறு வீடுகளை அப்புறப்படுத்துமாறு கடந்த மூன்று மாதம் முன்பு தீர்ப்பளிக்கப்பட்டது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த குடியிருப்பு மக்கள் கால அவகாசம் மற்றும் மாற்று இடமும் வேண்டும் என்று கேட்டதால் கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆக்கிரமிப்பு முழுமையாக அகற்றவில்லை எனக் கூறி மீண்டும் அதே நபர் வழக்கு தொடர்ந்தார். மீண்டும் நீதிமன்ற உத்தரவிட்டதன் அடிப்படையில் இன்று அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story