கன்னியாகுமரி : பூம்புகார் படகு துறையில் மணல் அகற்றும் பணி

கன்னியாகுமரி : பூம்புகார் படகு துறையில் மணல் அகற்றும் பணி
X
 மணல் அகற்றும் பணி 
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளூர் சிலையை படகுகளில் சென்று பார்க்க பொதிகை, குகன், விவேகானந்தா என மூன்று படகுகள் இயக்கப்படுகின்றன. மேலும் கன்னியாகுமரியில் இருந்து வட்டகோட்டைக்கு செல்ல திருவள்ளுவர், தாமிரபரணி என்ற இரண்டு சொகுசு படங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த படகுகள் அனைத்தும் பூம்புகார் படகு துறையில் நிறுத்தி வைப்பது வழக்கம். கடல் சீற்றம் மற்றும் அலை அதிகமாக இருக்கும் நேரங்களில் பூம்புகார் படகணையும் தளத்தில் மணல் குவிந்து விடுகிறது. இதனால் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை படகணையும் தளத்தில் குவிந்த மண்ணை அகற்றுவது வழக்கம். தற்போது பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் ராட்சத இயந்திரம் மூலம் படகணையும் தளத்தில் குவிந்த மணலை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த பணி விரைவில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story