கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா

கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா
X
பள்ளி ஆண்டு விழா
கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளியில் 102-வது ஆண்டு விழா, இலக்கிய மன்ற விழா மற்றும் விளையாட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. பள்ளி தாளாளர் பாதிரியார் உபால்டு தலைமை தாங்கினார். விழாவில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விளையாட்டு போட்டி உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் முன்னாள் விஞ்ஞானியும், இணை இயக்குனருமான குமார், பள்ளி தலைமை ஆசிரியை பிரசன்னா, உதவி தலைமை ஆசிரியர் ஜாண் சுகிலன், முன்னாள் தலைமை ஆசிரியர் டாக்டர் ரெம்ஜியூஸ் பரதராஜ், நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.விழாவில் கடந்த கல்வியாண்டில் அதிக தேர்ச்சி சதவீதம் காட்டிய ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story