கன்னியாகுமரியில்  ஆயிரம் மாணவ மாணவியர் ராமர் படத்துடன் ஊர்வலம் 

கன்னியாகுமரியில்  ஆயிரம் மாணவ மாணவியர் ராமர் படத்துடன் ஊர்வலம் 

  அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஆயிரம் மாணவர்கள், ராமர் படத்துடன் ஊர்வலம் சென்றனர்.  

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஆயிரம் மாணவர்கள், ராமர் படத்துடன் ஊர்வலம் சென்றனர்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஏகாட்சர மகா கணபதி கோவிலில் அகண்ட ராம நாம ஜெபம் தொடங்கியது. இந்த அகண்ட ராமஜெயம் இன்று காலை 9.30 மணி வரை 24 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. பின்னர் காலை 10 மணிக்கு ஆயிரம் மாணவ மாணவிகள் ராமர் படத்துடன் பங்கேற்ற பிரம்மாண்ட பேரணி நடந்தது. இந்த பேரணி கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தர் கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள கேந்திர வித்யாலயா மெட்ரிக் பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டது.

இந்த பேரணியை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர அகில பாரத தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில், துணைத் தலைவர் அனுமந்த ராவ் தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட இந்த பேரணி விவேகானந்தர் கேந்திர கடற்கரை வளாகத்தில் அமைந்துள்ள விவேகானந்தர் சிலை மற்றும், ஏக்நாத் ராணடே சமாதி அமைந்துள்ள பூங்கா வரை சென்று திரும்பி, முக்கிய வீதிகள் வழியாக கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடத்தை சென்றது.

இந்த ஊரகத்திற்கு முன்னால் சீருடை அணிந்த பள்ளி மாணவர்கள் பேண்ட் வாத்தியம் இசைத்தபடி அணிவகுத்து சென்றனர். பேரணி முடிவடைந்த பின்னர் கோமாதா பூஜை உடன் விவேகானந்தா கேந்திர நுழைவு வாசல் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் விவேகானந்தர் கேந்திர நிர்வாக அதிகாரி அனந்த ஸ்ரீ பத்மநாப உட்பட விவேகானந்தர் கேந்திர நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story