கபிஸ்தலம் ஸ்ரீ மனோன்மணி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன்

கபிஸ்தலம் ஸ்ரீ மனோன்மணி மாரியம்மன் கோயிலில் நடந்த பாடை காவடி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே மேல கபிஸ்தலத்தில் ஸ்ரீ மனோன்மணி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பாடை காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழா நாட்களில் தொடர்ந்து அம்மன் வீதிஉலா காட்சி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான இன்று பாடை காவடி திருவிழா நடைபெற்றது முன்னதாக பக்தர்கள் கோவில் அருகே உள்ள காவேரி ஆற்றங்கரையில் இருந்து பாடை காவடி, பால்குடம் எடுத்து கபிஸ்தலம் முக்கிய வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அங்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்

Tags

Next Story