காரப்பட்டு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி சாதனை
சாதனை படைத்த மாணவி
ஊத்தங்கரை அருகே காரப்பட்டு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி பூவிதா சாதனை படைத்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் காரப்பட்டு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி பூவிதா 500 க்கு 497 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.
பூவிதா பெற்ற மதிப்பெண்கள் விவரம் தமிழ் 99 ஆங்கிலம் 100 கணிதம் 99 அறிவியல் 99 சமூக அறிவியல் 100 மொத்த மதிப்பெண்கள் 497. இரண்டாம் மதிப்பெண் தினேஷ் -490/500.மூன்றாம் மதிப்பெண் கலையரசி-483/500 பெற்றனர். சாதனை மாணவர்களை தலைமையாசிரியர் ஞானபண்டிதன் ஆசிரியர்களுக்கும் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஊர் பொதுமக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
Next Story