கராத்தே போட்டி: திருப்பூர் மாணவி வெண்கலம்

புதுடில்லியில் நடந்த தேசியளவிலான கராத்தே போட்டியில், திருப்பூரைஸ் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவி வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

புதுடில்லியில் நடந்த தேசியளவிலான கராத்தே போட்டியில், திருப்பூரைஸ் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவி வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தேசிய அளவிலான கராத்தே போட்டி கடந்த 15ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை புதுடெல்லி சத்ரசால் மைதானத்தில் ஸ்கூல் கேம்ஸ் பெடரேசன் ஆப் இந்தியா சார்பில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களை சேர்ந்த 150 கராத்தே மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு சார்பில் திருப்பூர் புது ராமகிருஷ்ணபுரம் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்தவரும் சஸ்மிதா கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தினார். இதில் இரண்டாவது பரிசாக வெண்கல பதக்கம் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தார். இன்று பள்ளி வந்த மாணவி சஸ்மிதாவை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி மாலை அணிவித்து மாணவிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Tags

Next Story