கரிசல் இலக்கிய விழா

விருதுநகர் மருத்துவக் கல்லூரியில் கரிசல் இலக்கிய விழா இன்று தொடங்கியது.

விருதுநகர் மருத்துவ கல்லூரி கலையரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இரண்டு நாள் நடைபெறும் கரிசல் இலக்கிய திருவிழா தொடங்கியது.

மேலும் இன்று தொடங்கிய கரிசல் இலக்கிய திருவிழா மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. மேலும் கரிசல் இலக்கிய திருவிழாவை புக்கர் விருதுக்கான நீளப்பட்டியலில் இடம் பெற்ற தமிழ் எழுத்தாளரும் ஜே.சி.பி இலக்கிய விருதாளர் பெருமாள் முருகன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்து கரிசல் இலக்கிய திருவிழாவில் பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளை பார்வையிட்டனர். மேலும் கரிசல் இலக்கிய திரு விழாவில் பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் நம்முடைய இலக்கியங் களை மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக தமிழகம் முழுவதும் வைகை இலக்கியத் திருவிழா தென்பெண்ணை இலக்கியத் திருவிழா சிறுவாணி இலக்கிய திருவிழா சென்னை இலக்கியத் திருவிழா என தமிழகம் முழுவதும் நடத்தப்படுகிறது என்றார்.

விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக கரிசல் இலக்கிய திருவிழா நடத்தப்படுகிறது என்றார். பின்னர் கரிசல் இலக்கியத் திருவிழாவின் சிறப்பு விருந்தினர் இலக்கிய எழுத்தாளர் பெருமாள் முருகன் பேசும் போது எழுத்தாளர் கி.ராவுக்கு தமிழக அரசு மரியாதை செய்தும் மேலும் கி.ராவுக்கு மணிமண்டபம் கட்டி இருப்பதும் மிக முக்கியமான விஷயமாக நான் கருதுகிறேன் என்றார். ஏனென்றால் எழுத்தாளர்களுக்கு தமிழ் சமூகம் பெரிய அளவில் மதிப்பு வழங்கவில்லை என்ற குறை எங்களுக்கு இருந்து கொண்டு இருந்தது எனவும் இந்த நிலையில் எழுத்தாளர் கி.ராவுக்கு அரசு மிகப்பெரிய மரியாதையை அரசு செலுத்துகிறது என்றார்.

மேலும் இந்த கரிசல் இலக்கிய திருவிழா வை அதன் தொடர்ச்சியாக பார்க்கிறேன் என புக்கர் விருதுகான நீளப்பட்டியலில் இடம் பெற்ற தமிழ் எழுத்தாளரும் ஜே.சி.பி இலக்கிய விருதாளர் பெருமாள் முருகன் பேசினார். மேலும் பேசிய அவர் தமிழில் கிளை மொழிகளின் அடிப்படையில் தான் வட்டார இலக்கியம் என்று கூறுகிறோம். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று 5 நிலங்களை குறிக்கிறது. பாலை என்ற நிலமே கிடையாது. ஆனால் பாலை என்பது குறித்து சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும் என சில ஆண்டுகள் மழை பெய்யாவிட்டால் வறட்சியால் குறிஞ்சி முல்லை இரண்டும் பாலையாக மாறிவிடும். மறு படி மழை பெய்தால், தன் இயல்பு நிலைக்கு மாறிவிடும் எனவும், ஆகவே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என உலகத்தில் 4 வகையான நிலம் என்றே குறிப்பிடுவோம்.

தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பு குறிஞ்சி -மலைப்பகுதி, முல்லை-காடு, மருதம்-வயல், நெய்தல்- கடல் சார்ந்தது என நானில அமைப்புடனும், பல்வேறு பருவ கால நிலைகளையும் கொண்டது தமிழ்நாடு என்றார். மேலும் வட்டார இலக்கியம் என்பது அந்தந்த பகுதியில் உள்ள மக்களின் பண்பாடு, மொழிகளில் அமைப்பு பொருத்து அமைந்துள்ளது. இதில் கரிசல் காட்டு இலக்கியம் தனி இலக்கியமாக உருவானது எனவும், பல்வேறு கரிசல் எழுத்தாளர்கள், கரிசல் கதைகள், நாவல்களை எடுத்துக் கூறி கரிசல் இலக்கியத்தையும், கரிசல் பண்பாட்டையும், கரிசல் இலக்கியங்களை எடுத்துக் கூறினார். இந்த கரிசல் இலக்கிய திருவிழாவில் சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் தர்மர் உள்ளிட்ட ஏராளமான புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story