பழவேரியில் கற்படை வட்டங்கள் ஆர்வத்துடன் அறிந்த மாணவர்கள்
பழவேரியில் கற்படை வட்டங்கள் பற்றி மாணவர்கள் ஆர்வத்துடன் அறிந்து கொண்டனர்.
பழவேரியில் கற்படை வட்டங்கள் பற்றி மாணவர்கள் ஆர்வத்துடன் அறிந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி மலையடிவாரத்தில் பெருங்கற்கால நினைவுச் சின்னங்களான கற்படை வட்டங்கள் மற்றும் கற்பதுக்கைகள் ஏராளமாக உள்ளன. இதுகுறித்து, தமிழர் தொன்மை வரலாற்று ஆய்வு மைய அமைப்பாளர் வெற்றித்தமிழன் இப்பகுதியில் ஏற்கனவே ஆய்வு மேற்கொண்டுள்ளார். பாலாற்றுப் பகுதியை ஒட்டி பழவேரி குன்று உள்ளதால், ஆற்றங்கரையோரம் மனித நாகரிகத்தின் வளர்ச்சியின் அடையாளங்களாக முதுமக்கள் நினைவிடங்களான கற்பதுக்கைகளும், கற்படை வட்டங்களும், சில இடங்களில் கற்கள் சூழ்ந்த ஆழமான குகைகள் உள்ளதைக் கண்டறிந்து அவற்றை பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து, வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியர் உள்ளிட்ட பலரும் அங்குள்ள கற்படை வட்டங்களை அவ்வப்போது கண்டு வருகின்றனர். செங்கல்பட்டு ராஜேஸ்வரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, தமிழ்த்துறை இலக்கிய மாணவ - மாணவியர், நேற்று பழவேரி மலையடிவாரத்தில் உள்ள கற்படை வட்டங்களை ஆர்வத்தோடு கண்டு, அதுகுறித்த வரலாற்றை தங்களது பாடநுால் வழியாக அறிந்தனர்.
Next Story